“மலையக ஈ கல்வி வட்டம்” ஆரம்பம்

மலையக பகுதிகளில் கணித, விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்கும் முகமாக ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி ஊடாக “மலையக ஈ கல்வி வட்டம்” எனும் தொனிப்பொருளில் புதிய திட்டம் ஒன்று 27.11.2016 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இதன்போது அக்கறைப்பற்று மாவட்ட நீதிபதி பீட்டர் போல், விரிவுரையாளர்கள், பீடாதிபதி, கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி இந்த திட்டத்தின் அடிப்படையில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரிக்கு அருகில் உள்ள 4 பாடசாலைகள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரத்தில் கணித, விஞ்ஞான பாடங்களை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இதனூடாக கணித, விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்க முடியும்.

எதிர்காலத்தில் இத்திட்டம் மலையக முழுவதும் விஸ்தரிக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.dsc_0011 dsc_0019 dsc_0038 dsc_0041 dsc_0051 img_5519

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*