மரணித்தவர்களை நினைவுகூருவது ஜனநாயக் உரிமை – ஊடகங்கள் தவறாக அறிக்கையிடக் கூடாது!

luxman-yapaதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பை நினைவு கூற இடமளிக்கப்படாது, எனினும் மரணித்தவர்களை நினைவு கூறுவது ஜனநாயக உரிமை எனத் தெரிவித்துள்ள  நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன எது எவ்வாறு இருப்பினும் ஊடகங்கள் இவற்றை தவறாக அறிக்கையிடக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர் மத்திய வங்கி பிணை முறிகள் சம்பவம் தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவால் நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை இன்று அல்லது நாளைய தினம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

10 நாட்களுக்குக்குள் இந்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய செயற்குழுவால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள போதும், ஆறு நாட்களுக்குள்ளேயே இந்த அறிக்கையை முழுமையாக நிறைவு செய்ய குறித்த குழுவால் முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் குழுவின் அறிக்கையில் ஆறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து சபாநாயகர் ஊடாக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

அல்லது ஜனாதிபதிக்கு வழங்கி பின்னர் அவர் ஊடாக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்புள்ளதாக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*