மத்திய மாகாணத்தில் மண்வளத்தினை பாதுகாக்க விசேட திட்டம்.

img_4135மத்திய மாகாணத்தில் மண் அரிப்பினை தடுத்து மண் வளத்தினை பாதுகாத்து இயற்கை சூழலினை மேலும் எழிலூட்டும் முகமாக விசேட திட்டம் ஒன்றினை மத்திய மாகாண விவசாயத்திணைத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைய ரணவிரு ஹரித்த எனும் தொனிப்பொருளில் பழக்கன்றுகள், மூலிகை கன்றுகள், உட்பட பெறுமதி மிக்க 400 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு மத்திய மாகாண விவசாய, தோட்ட உட்கட்டமைப்பு இந்து கலாசார மீன்பிடி அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தலைமையில் 05.11.2016 அன்று அட்டன் பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

இதன்போது இம்மரக்கன்று அட்டன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுபதிகாரிகளுக்கும், ரானுவ முகாம் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டன.

அட்டன் பொலிஸ் தலைமையக கடமை பொலிஸ் பொறுப்பதிகாரி சுதத் வல்பொல அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அட்டன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசாநாயக்க உட்பட அட்டன் பொலிஸ் கோட்டத்தின் நிலைய பொறுப்பதிகாரிகள், ரானுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.img_4130
img_4141 img_4145

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*