பொலிஸ் துறையில் தமிழ் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை – பிரதமர் ரணில்

ranilபொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்ட போது பல இனங்களும் உள்ளடங்கி இருந்தன, அதுபோன்றதொரு நிலையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது, எனதெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதற்கமைய அடுத்த வருடம் முதல் பொலிஸ் துறையில் தமிழ் அதிகாரிகளை நியமிக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

களுத்துரை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இலங்கையில் போரினால் முதலில் மரணித்தது பொலிஸ் பரிசோதகர் பெஸ்டியன் பிள்ளை உள்ளிட்ட தமிழ் பொலிஸாரே என்று கூறவேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கில் இராணுவ செயற்பாடுகள் நிறைவடைந்த பகுதிகளை மீண்டும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பகுதிகளில் சட்டம் மற்றும் அமைதியை நிலைநாட்ட வேண்டியது பொலிஸாரின் கடமை, அந்தக் கடமைகளை உரிய முறையில் செய்யவே தமிழ் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது எனவும் அவர் கூறினார்.

எனவே, அந்தப் பகுதிகளுக்கு மொழி தெரிந்த பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும். பொலிஸ் சேவையில் உள்ளவர்கள் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மொழிகளான தமிழ் மற்றும் சிங்களத்தை அறிந்திருக்க வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*