புதிய அபிலாஷைகள், மனவுறுதியுடன் வாழ்வைப் புதுப்பிப்போம்

e5c89da5b199460a375618c179d9ff99_Lபுதிய அபிலாஷைகள், மனவுறுதியுடன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளக் கிடைக்கும் சிறப்பான சந்தர்ப்பமாக இதனை ஏற்றுக் கொள்வோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்று(14) அனைத்து சிங்கள, தமிழ் மக்களாலும் வெகு விமரிசையாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் தமிழ் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு வௌியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து, மானிட கௌரவத்தைப் பாதுகாக்கும்,  கலாசாரப் பல்வகைத் தன்மையை மதிக்கும் ஐக்கியம் மிகுந்த மக்களாக இவ்வாண்டின் சிங்களத் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடக் கிடைத்தமையானது இலங்கையரான நாமனைவரும் பெற்றுக் கொண்ட பாக்கியமாகும். பாக்கியம் மிகுந்த சித்திரை மாதத்தில் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படும் சூரியத் திருவிழாவானது இயற்கைக்கும் மனிதனுக்கும் மத்தியில் காணப்படும் அன்னியோன்ய உறவை அர்த்தமிக்கதாக மாற்றக் கூடிய, சூரியபகவான் முதலான முழு இயற்கைக்கும் நன்றியைத் தெரிவிக்கும், தேசிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் செழுமைப்படுத்தும் மிகப் பெரிய கலாசாரத் திருவிழாவாகக் காணப்படுகிறது.

தற்போது அனைவருக்கும் சுதந்திரமாக புத்தாண்டைக் கொண்டாடக் கூடியதொரு சூழல் நாட்டிலே உருவாகியுள்ளது. அதற்காக வேண்டி அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவும் இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்கிறேன். பெற்றுக் கொண்ட சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தைக் கட்டியெழுப்பும் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டத்தோடு ஒன்றிணைந்து செயற்படவும் இப்புத்தாண்டில் உறுதி பூணுவோம்.

அனைத்து இலங்கையருக்கும் சமாதானம்,மகிழ்ச்சி நிறைந்த சுபீட்சம் மிக்கதாக இப்புத்தாண்டு அமையட்டும் என பிரார்த்திக்கிறேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*