படுகொலை செய்யப்பட்ட மாணவன் வீட்டிற்குச் சென்றார் எதிர்க்கட்சித் தலைவர்

sulaxsan3யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்திற்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அண்மையில், யாழில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகினர்.

இவ்வாறு உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான விஜயகுமார் சுலக்சனின் வீட்டிற்கு, சம்பந்தன் இன்று சென்றிருந்தார்.

அங்கு சுலக்சனனின் பெற்றோரை சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.sulaxsan

மேலும் இந்த விடயம் குறித்து ஜனாதிபதியின் தலையீட்டில் நியாயமான விசாரணைகளை நடத்த வேண்டும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளதாகவும் சம்பந்தன் இதன்போது கூறியுள்ளார்.

இச் சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரணவனபவனும் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*