பக்கசார்பற்ற சுயாதீன விசாரணைகளைகளுக்கு ஜனாதிபதி உத்தரவு

maithripala-sirisenaயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் இருவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் சம்பவம் தொடர்பிலான விசாரணை எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியாக இடம்பெறும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தாம் மிகுந்த கவலை அடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுள்ளார் .இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு நஷ்ஈட்டை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*