நவ. 18 – தனது பிறந்த தினத்தன்று புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறார் மகிந்த !

mahinthaமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் 71 ஆவது பிறந்த தினமான நவம்பர் 18 அன்று அவர் தனது புதிய கட்சி தொடர்பான உத்தியோக பூர்வ அறிவித்தலை வெளியிடுவார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச தனது ஆதரவாளர்களிற்கு தனது பிறந்தநாள் பரிசாக இந்தச் செய்தி இருக்கப்போகின்றது என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் இந்தப் புதிய கட்சிக்கான அமைப்பாளர்கள் நிமமனம் உள்ளிட்ட வேலைகள் இரகசியமாக முடிவுறுத்தப்பட்டுள்ளதாகவுமு் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்கா சுதந்திக்கட்சியில் தற்போது உள்ளவர்களில் மகிந்த ஆதரவு அணிக்கு தாவக்கூடியவர்களை வளைத்துப்போடும் வேலைத்திட்டமும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*