தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய பொங்கல் விழா.

கொள்கை திட்டமிடல் பொருளாதார அமைச்சு ,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் வடமாகாண சபை என்பன இணைந்து நடாத்தும் தேசிய பொங்கல் விழாவானது, இன ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்வாக அமையும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமையாக அபிவிருத்தி பிரிவுக்கான பிரதி பணிப்பாளர் சுனில் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பொங்கல் நிகழ்வில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லீம் இளைஞர்கள் 750 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இந் நிகழ்வு எதிர்வரும் 10ம் திகதி வட்டுக்கோட்டை யாழ்ப்பாண தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அந் நிகழ்வு தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு புதன்கிழமை மதியம் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ்.மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.
அதில் நிகழ்வு தொடர்பில் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார், 
மேலும் தெரிவிக்கையில், 
தேசிய ரீதியலான தைப்பொங்கல் விழா இது. இன ரீதியாக ஒற்றுமையை ஏற்படுத்தும் நிகழ்வு . இந் நிகழ்வுக்காக தென்னிலங்கையில் இருந்து ஒரு விஷேட புகையிரத்ததில் இளைஞர்கள் எதிர்வரும் 9 ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளனர்.
அந்த இளைஞர்கள் வடக்கில் உள்ள இளைஞர்களுடன் ஒன்றிணைந்து அவர்களின் வீடுகளில் ஒரு நாள் தங்கி இருந்து, தைப்பொங்கல் கலாச்சார நிகழ்வினை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
ஆகவே இந்த நிகழ்வுகள் சகோதர சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதனை அறிந்து கொள்ளும் நிகழ்வாக அவர்களுக்கு அமையும்.
தேசிய இளைஞர் சேவையின் அங்கமான கலை கலாச்சார பயிற்சி நிலையத்தில் இருந்து தைப்பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு அதற்கு தகுந்த நிகழ்ச்சிகளை செய்யவுள்ளனர். 
அத்துடன் கலை கலாச்சார பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவர்களை அன்றைய தினம் அதில் இணைத்து கொள்ள உள்ளோம்.
அதேபோன்று விளையாட்டு ரீதியாக கரப்பந்தாட்டம் , கபடி , போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற விரும்புகின்றவர்களை அன்றைய தினம் தெரிவு செய்ய உள்ளோம்.
இவை டிப்ளோமா பாடரீதியாக மூன்று வருட காலத்திற்கு அந்த பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலமான மூன்று வருடத்திற்கும் உணவு உடை தங்குமிடம் என்பன இலவசமாக வழங்கப்படும். என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*