துருக்கி எல்லைக்கு ஏவுகணைகளை அனுப்பியது ரஷ்யா: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்!

ரஷ்யாவின் போர் விமானத்தை துருக்கி நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஏவுகணைகளை துருக்கி-சிரியா எல்லைக்கு ரஷ்யா அனுப்பியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.         

ரஷ்யாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின. தங்களது வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால்தான் ரஷ்யாவில் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக துருக்கி தெரிவித்தது.
ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு  அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது. துருக்கி எங்களை முதுகில் குத்தி விட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் துருக்கியில் இருந்து சிரியா எல்லைக்குள் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் விழுந்துள்ளது. எனவே துருக்கி வான் எல்லைக்குள் அத்துமீறி பறந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறினார்.

இந்த விவகாரத்தை  நாங்கள் தீவிரமாக்க விரும்பவில்லை என்று துருக்கி தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் ரஷ்யா தனது ஏவுகணைகளை துருக்கியின் எல்லைப் பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் நீடிக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*