சுன்னாகம் வாள்வெட்டை மாணவர் படுகொலையுடன் தொடர்புபடுத்தி திசைதிருப்ப வேண்டாம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

viber-imageயாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேசத்தில் இரண்டு பொலிசார் மீது இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகலில் நடந்தப்பட்ட வாள் வெட்டு தாக்குதல் வர்த்தகர் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளின் விளைவாக ஏற்பட்டமோதல் என அறிவதாக தெரிவித்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பல்கலைக்கழக மாணவர்களை பொலிசார் படுகொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி படுகொலைச் சம்பவத்தை திசைதிருப்ப முனைகின்ற சம்வமாகக்கூட இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் வாள்வெட்டுச் சம்பவத்தை மாணவர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி திசை திருப்ப முனையக்கூடாது என்றும் இது வர்த்தகருடன் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதச் செயல் எனின் அவ்வாறே அணுகப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமைத்தில் இன்று(23) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றில் பங்குபற்றியிருந்தபோதே வெர் இவ்வாறு தெரிவித்துள்ளார்._92060652_09

வாள்வெட்டுச் சம்பவத்தில் காயமடைந்தகாவல்துறையைச் சேர்ந்த நிமல் பண்டார, பி.எஸ்.நவரட்ன ஆகியோர் காயமடைந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சுன்னாகத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் எதிரில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதில்  ஆறு பேர் கொண்ட குழுவொன்று காவல்துறையினர் மீதான இந்தத் தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*