சிறுமிகளிற்கு சீர்திருத்தப் பள்ளி இல்லை – வேறு கூடங்களிற்கு அனுப்பும்போது துஸ்பிரயோகங்கள் நிகழ்கிறன.

யாழ் மாவட்டத்தில் சிறுமிகளிற்கான சீர்திருத்தப் பள்ளி இல்லாமையால் அவர்களை வேறு சிறைக்கூடங்களிற்கு அனுப்புவதால் அங்கு அவர்கள் துஸ்பிரயோகங்களிற்கு உள்ளாக்கப்படுவதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரச அமைச்சின் மாவட்ட ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் 28.02.2016 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சிறுவர் மற்றும் பொண்கள் விவகாரம் தொடர்பாக ஆராயப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறுமிகளிற்கான சீர்திருத்தப் பள்ளி அமைக்க சுமார் 450 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர் அச்சுவேலியிலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலுள்ள 24 ஏக்கர் காணியில் சிறுமிகளிற்கு பிறிதானதொரு சீர்திருத்தப் பள்ளி அமைக்க முடியும் என்றார்.

அதன்போது குறுக்கிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சீர்திருத்தப் பள்ளிற்கு 24 ஏக்கர் காணி தேவையில்லை என்றும் அவர்களிற்கு ஓரிரு ஏக்கர் காணியைக் கொடுத்துவிட்டு ஏனைய காணிகளை கையகப்படுத்தி ஏனைய தேவைகளிற்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எனினும் குறித்த காணியில் சிறுவர்களிற்கான விளையாட்டு மைதானம் விவசாய பண்ணை என்பன அமைக்கப்படவேண்டும் என்றும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளை நவீனப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*