சம்மந்தனின் கருத்தை நாம் வரவேற்கின்றோம் – தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தரப்படுமாயின் தாம் அதை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனின் தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாக தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஊடக அறிக்கை
தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தரப்படுமாயின் தாம் அதை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்.
21.01.2016 அன்று கிளிநொச்சியில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தையடுத்து ஊடகவியலாளர்  மாநாட்டை நடாத்திய கூட்டமைப்பின் தலைவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் இந்த கருத்தை நாம் வரவேற்பதுடன் பேரவையின் உப குழுவினால் தயாரிக்கப்படும் தீர்வுத்திட்ட வரைபானது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனிடமும் கையளிக்கப்படும்.
தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள தீர்வுத்திட்ட வரைபு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமும் கையளிப்பது என்ற தீர்மானம் பேரவை ஆரம்பிக்கப்பட்டபோதே எடுக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்குட்பட்ட விதத்தில் பேரவையால் தயாரிக்கப்பட்டு வரும் தீர்வுத்திட்ட வரைபு தமிழ் மக்களிடம் கொன்டு செல்லப்பட்டு அவர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு இறுதிவடிவம் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும்  முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று நாம் உறுதியாகக் கூறிக்கொள்ளகின்றோம்.

நன்றி
ஏற்பாட்டுக்குழு
தமிழ் மக்கள் பேரவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*