கைதிகள் உண்ணாவிரதம் தொடர்கின்றது

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல்நிலை தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு கொழும்பு மகசின் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள, 13 பேர் கடந்த 23ம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

வழக்கு தாக்கல் செய்யாமல் வருடக் கணக்காக தாம் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருப்பதற்காக எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 

இந்தநிலையில் நாளாந்தம் அவர்களது உடல்நிலை தொடர்பில் சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதிப்பதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெரனிய கூறியுள்ளார். 

மேலும், இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள எவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*