கைதான கருணாவிற்கு டிசம்பர் 07 வரை விளக்கமறியல்

karuna_கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரனை எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று (29) உத்தரவிட்டார்.

FCID விசாரணையின் பின் கருணா கைது

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 9 கோடி ரூபாவிற்கும் மேல் பெறுமதியான வாகனமொன்றை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பாரிய நிதி மோசடிகளை ஆராயும் விசேட போலீஸ் குழு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அழைக்கப்பட்ட கருணா அம்மானிடம் போலீசார் வாக்குமூலமொன்றை பதிவு செய்தனர்.
பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட அவர் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.

குண்டு துளைக்காத வாகனம் மீட்பு 

கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சராக இருந்தார்.

இதன்போது அவருக்கு வழங்கப்பட்ட ரூபா 9 கோடி பெறுமதியான குண்டு துளைக்காத வாகனம் ஒன்றை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள வாகன திருத்துமிடம் ஒன்றிலிருந்து அண்மையில் மீட்கப்பட்டிருந்தமை தொடர்பிலேயே குறித்த விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*