சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / கூட்டமைப்புக்கு வந்த சோதனை? – நிலாந்தன்

கூட்டமைப்புக்கு வந்த சோதனை? – நிலாந்தன்

கூட்டமைப்புஉருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும்  ஏகபோகத்திற்கு  இப்பொழுதுசோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத்  தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்தநடுத்தர வர்க்கத்தினர்  மத்தியில்படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பும்தற்பொழுது சமூகத்தின் ஏனைய மட்டங்களுக்கும் பரவத்தொடங்கியுள்ளன.
அண்மையஆண்டுகளில் இணையப் பரப்பில் குறிப்பாகசமூக வலைத்தளங்களில் கூட்டமைப்புக்கு எதிரான கேள்விகளும் விமர்சனங்களும்அதிகரித்து வந்தன. இப்பொழுது அந்தஅதிருப்தியானது மெய்நிகர் யதார்த்த பரப்பையும் தாண்டி ஒரு பௌதீகயதார்த்தமாக பரவிவருகிறது. யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகள் சிலவற்றின் ஆசிரியர் தலையங்கங்களும் அதைப் பிரதிபலிக்கின்றன.
இவ்வாறாககடந்த ஆறு ஆண்டுகளில் கூட்டமைப்பின்மீதான கேள்விகளும்   விமர்சனங்களும்அதிகரிக்கக் காரணங்கள் எவை?
முதலாவதுகாரணம்கூட்டமைப்பானது எதிர்ப்பு அரசியல் தடத்தில் இருந்துவிலகத் தொடங்கியிருப்பது. இதைச் சிறிது விரிவாகப்   பார்க்கலாம். வடமாகாணசபை உருவாக்கப்படும் வரையிலும் கூட்டமைப்பு ஒப்பீட்டளவில் துலக்கமான ஒரு எதிர்ப்பு அரசியலைமுன்னெடுத்து  வந்தது. குறிப்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம்இருந்தவரையிலும்  அந்தஎதிர்ப்பு அரசியலுக்கு ஓர் அழுத்தமும் இருந்தது. ஆனால்  மாகாணசபைஉருவாக்கப்பட்டபின் மாகாணசபையை அபிவிருத்திக்கான ஒரு பரிசோதனைக் களமாகமாற்ற கூட்டமைப்பு முயற்சித்தது. அதற்காக கொழும்பை நோக்கிமிகத் துலக்கமாக நல்லெண்ணச் சமிக்ஞைகளையும்  காட்டியது. வடமாகாணசபை உருவாக்கப்பட்டபோது அதை இலங்கைத் தீவில்  மற்றொருஅதிகார மையம் போலக் கட்டிஎழுப்பவும் அந்த மாகாண சபையை  தத்தெடுக்கவும்சில சக்திமிக்க வெளிநாடுகள் முயற்சிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 மகிந்த ராஜபக்சவுக்கு எதிரானஓர் அழுத்தப் பிரயோக உத்தியாக  வடமாகாணசபைக்கு அளவுக்கு அதிகமான ஒரு முக்கியத்துவத்தையும்
அங்கீகாரத்தையும்மேற்குநாடுகளும் இந்தியாவும் வழங்கக் கூடும்
என்றும்எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளிநாடுகள் வடமாகாணசபையைஅதிகமதிகம் நெருங்க நெருங்க ராஜபக்சஅரசாங்கம் அந்த மாகாணசபை இயங்குவதற்குஎதிராக புதிது புதிதாக முட்டுக்கட்டைகளை  உருவாக்கியது. இதனால் கூட்டமைப்பின் நல்லிணக்க சமிக்ஞைகள் எதிர்பார்த்த பலன்களைத் தரவில்லை.
இதன் விளைவாக வடமாகாண முதலமைச்சர்படிப்படியாக எதிர்ப்பு அரசியலை நோக்கி  நகரத் தொடங்கினார்.
இப்பொழுதுஅவர் ஏறக்குறைய தீவிர  தமிழ்த்தேசியவாதிகளில்பெரும்பகுதியினரால் ஆர்வத்தோடு கவனிக்கப்படும் ஒருவராக மாறிவிட்டார். அதாவது  வடமாகாணசபையைஇந்தியாவோ அல்லது மேற்கத்தேய நாடுகளோதத்தெடுத்தனரோ இல்லையோ, முதலமைச்சரை தீவிர தேசியவாதிகளில் ஒருபகுதியினர்  தத்தெடுத்துவிட்டார்கள்என்பது மட்டும் தெரிகிறது. ஏறக்குறைய  கால்நூற்றாண்டுகளுக்குமுன்பு வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணசபைக்குமுதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் சபையைஇயக்க  முடியாமல்ஒரு கட்டத்தில் ஈழப்பிரகடனம் செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார். இப்பொழுது விக்கினேஸ்வரனும்  இனப்படுகொலைப்பிரகடனத்தைச் செய்துவிட்டு எதிர்ப்பு அரசியலுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டார். இது முதலாவது கட்டம்.
இரண்டாவதுகட்டம்ஆட்சி மாற்றத்தோடு தொடங்கியது. கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகியது. இது தவிர்க்கமுடியாதபடி இணக்க
அரசியலைவேறொரு வடிவத்தில் முன்னெடுக்கவேண்டிய நிலைக்கு அந்தக்   கட்சியைத்தள்ளியது. மகிந்தவுடனான இணக்க அரசியல் தோல்வியில்  முடிந்தகையோடேயே மைத்திரியுடனான இணக்க அரசியல் தொடங்கியது. இந்நிலையில் வரவிருக்கும் தேர்தலில் கூட்டமைப்பினால் முழுமையான, மூர்க்கமான ஒரு எதிர்ப்பு அரசியலைமுன்னெடுக்க முடியுமா?
நிச்சயமாகமுடியாது. இதுதான் பிரச்சினை. தமிழ்தேர்தல் களம்  எனப்படுவதுஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாகஎதிர்ப்பு அரசியலுக்கே பழக்கப்பட்டு வந்துள்ளதுஎதிர்ப்புஅரசியலின் அடிப்படையில் உருவாக்கப்படும் இனமான அலையானது முடிவில்
 வாக்களிப்பு அலையாக மாறும். அந்தவாக்குகள் பெரும்பாலும் இன
 அடையாள வாக்குகளே. அல்லதுஅரசுக்கு எதிரான வாக்குகளே. குறிப்பாக  2009 இற்குப்பின் பெருமளவிற்கு பழிவாங்கல் வாக்குகளே.
ஆனால் இம்முறை கூட்டமைப்பால் அப்படிஒரு எதிர்ப்பு அரசியலை
முன்னெடுக்கமுடியாது. வேண்டுமானால் மகிந்தவுக்கு எதிராக ஓர்
எதிர்ப்புஅரசியலையும், மைத்திரி மற்றும் ரணில் போன்றவர்கள்
பொறுத்துஎதிர்ப்பற்ற ஒரு நிலையையும் பேணவேண்டியிருக்கும்.
அதாவதுஒரு முழுமையான இன உணர்வு அலையைதோற்றுவிப்பது கடினமாக இருக்கும். இத்தகையதோர்பின்னணியில் வடமாகாணசபை
  உருவாக்கப்பட்டதில் இருந்து மகிந்தவை நோக்கியும்மைத்திரியை
நோக்கியும்அதாவது தென்னிலங்கையை நோக்கி கூட்டமைப்புக்
காட்டிவரும்நல்லெண்ணச் சமிக்ஞைகளானவை அக்கட்சியானது எதிர்ப்பு அரசியல் தடத்தில் இருந்துவிலகி வருகிறதா என்ற சந்தேகத்தை வாக்காளர்கள்மத்தியில் தோற்றுவித்துவிட்டது. இது கூட்டமைப்பின் மீதானவிமர்சனங்கள் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.
இரண்டாவதுகாரணம்வடமாகாணசபை. வடமாகாணசபையில் கூட்டமைப்பு  ஆளும்கட்சியாக இருக்கிறது. ஆளும் கட்சிகளுக்கு எதிரானஅதிருப்தி என்பது பொதுவானது. அதுவும்கூட்டமைப்பைப் பொறுத்தவரை அக்கட்சியானது வடமாகாணசபையில் இணக்க அரசியலுக்கும் எதிர்ப்புஅரசியலுக்கும் இடையே இரண்டாகக் கிழிபடுகிறது. முழுமையான இணக்க அரசியலையும் முன்னெடுக்கமுடியவில்லை. துலக்கமான எதிர்ப்பு அரசியலையும் முன்னெடுக்க முடியவில்லை. மகிந்த இருந்தவரை மாகாணசபைஇயங்க முடியாததுக்கு அவரைக் குற்றம் சாட்டமுடிந்தது. ஆனால் மைத்திரி வந்தபின்னரும் நிலைமைகள் பெரியளவில் மாறவில்லை என்று முதலமைச்சர் லண்டனில்வைத்துக் கூறியுள்ளார். இது
வாக்காளர்களுக்குஒரு தெளிவற்ற சித்திரத்தையே வழங்குகிறது.
குறிப்பாகஅரை நூற்றாண்டுக்கும் மேலாக எதிர்ப்பு அரசியலுக்கே
வாலாயப்பட்டுப்போன ஒரு வாக்களிப்பு பாரம்பரியத்தைப்பொறுத்தவரை  இதுஒரு தெளிவற்ற சித்திரம்தான். ஒருபுறம் முதலமைச்சர், தீவிர தேசிய சக்திகளைக்கவரக்கூடியவராகக் காணப்படுகிறார். ஆனால் அவருடைய கட்சித்தலைமையோ தீவிர தேசிய சக்திகளால்கடுமையாக நிந்திக்கப்படுகிறது.
 அதோடு, ஓர் ஆளும்கட்சியாக அவர்கள் வடமாகாணசபையில் மக்களின்அன்றாடப் பிரச்சினைகளை எவ்வளவு தூரம் வெற்றிகரமாகத்தீர்த்திருக்கிறார்கள்? முழுக்க முழுக்க எதிர்ப்புஅரசியலை
 நடத்தினால் இக்கேள்வி வராது. எல்லாப் பழியையும்கொழும்பின் மீது
 போட்டுவிட்டுத் தப்பிவிடலாம். ஆனால் இப்பொழுது தப்பமுடியாது.
 உதாரணமாக சுன்னாகம் நீர்ப்பிரச்சினை. நீரில் மாசு உண்டோஇல்லையோ அது பொதுசன அபிப்பிராயமாகமாறிவிட்டது. அதுவும் இதுபோன்ற பல  பிரச்சினைகளும்கூட்டமைப்பின் மீதான அதிருப்தியையும் கோபத்தையும்அதிகப்படுத்தியுள்ளன. இது இரண்டாவது காரணம். குறிப்பாக வடக்கிற்கே உரியது.
மூன்றாவதுகாரணம்ஆயுதப் போராட்டம் பற்றியமுற்கற்பிதங்களோடு மிதவாதிகளை அணுகுவது. ஆயுதப் போராட்ட களத்தில்எதுவும் வேகமானது. ஆயுதப் போராட்டத்தை ஒருஅளவுகோலாக வைத்துக் கொண்டு மிதவாதிகளை அளக்கமுடியாது. அந்த வேகத்திற்கு ஒன்றும்நடக்கவில்லை என்று குற்றம் சாட்டவும்முடியாது. ஆனால் ஆயுதப் போராட்டம்தோற்கடிக்கப்பட்ட பின்னரான ஒரு சமூகச் சூழலில்கூட்டுக் காயங்களோடும் கூட்டு மனவடுக்களோடும் கொந்தளித்துக்கொண்டிருக்கும் ஓர் உளவியல் சூழலில்மிதவாதிகளைக் குறித்து முடிவெடுக்கும் எல்லாத் தருணங்களிலும் ஆயுதப்போராட்டம் ஒரு முற்கற்பிதமாக வந்துமுன்னால் நிற்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். இது காரணமாக சராசரிவாக்காளர்கள் 2009 இற்கு முந்திய நிலைமைகளையும்2009 இற்கு பிந்திய நிலைமைகளையும்
ஒப்பீடுசெய்வர்கள். இதுவும் கூட்டமைப்புக்கு பாதகமானதே.
இனி நான்காவது காரணம்கடந்த ஆறு ஆண்டுகளில்கூட்டமைப்பு தன்னைப் படிப்படியாக புலிநீக்கம் செய்துவிட்டதாக புலிகளின் ஆதவாளர்கள் நம்புகிறார்கள். புலி நீக்கம் மட்டுமல்ல. தேசிய நீக்கமும் நிகழ்ந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்ஆயுதப்போராட்டத்தில் வெளிக்காட்டப்பட்ட வீரத்தையும்தியாகத்தையும்கூட்டமைப்பின் தலைமை போதியளவிற்குக்  கௌரவிக்கவில்லை என்றும் அவர்கள் கோபமடைந்துள்ளார்கள். இக்கோபத்தை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதிகம் காணமுடிகிறதுதமிழகத்திலும் ஓரளவிற்குக் காணமுடிகிறது. இதுவும் கூட்டமைப்பின் மீதானஅதிருப்திகள் அதிகரிக்க ஒரு காரணம்.
இனி ஐந்தாவது காரணம்கடந்த ஆறு ஆண்டுகளில்ஐந்து தேர்தல்கள்
நடந்துவிட்டன. இத்தேர்தல்களின் போது கூட்டமைப்பு வழங்கிய
வாக்குறுதிகளில்அநேகமானவை நிறைவேற்றப்படவில்லை. கூட்டமைப்பு மட்டுமல்ல கடந்த சுமார் 60 ஆண்டுகாலஇன அடையாள அரசியலில் மிதவாதிகள்வழங்கிய பெரும்பாலான வாக்குறுதிகள்  நிறைவேற்றப்படவில்லை. எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும்
கட்சியானதுவாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என்பது வாக்காளர்களுக்குதெரிந்தே இருக்கிறது. அது அரசாங்கத்தை   எதிர்க்கிறது என்பதற்காகவே அவர்கள் தமது வாக்குகளைஅளித்தார்கள்வாக்குறுதிகளுக்காகஅல்ல.
ஆனால்2009 இற்குப் பின்னரான  அசாதாரணமானஓர் உளவியல் சூழலின் பின்னணியில்கூட்டமைப்பு விடும்  ஒவ்வொருசிறு தவறும் உருப்பெருக்கிக் காட்டப்படுகின்றன.   குறிப்பாகநிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கிமக்களாணையைப் பெற்று பின்னர் கொழும்பிலும்அனைத்துலக அரங்கிலும் அவர்கள் அந்த  மக்களாணைக்கு விசவாசமாக நடந்துகொள்ளவில்லை என்ற விமர்சனம் படித்த  நடுத்தரவர்த்கத்தினர் மத்தியில் பரவலாக உருவாகிவிட்டது.மேற்சொன்னமுக்கிய காரணங்கள் மற்றும் ஏனைய உபகாரணங்களின்திரண்ட விளைவாக கூட்டமைப்பின் மீதானஅதிருப்தி அதிகரித்து வருவது குறிப்பாக யாழ்ப்பாணத்தேர்தல் களத்தில் துலக்கமாகத் தெரிகிறது. இது முழுக்க முழுக்ககூட்டமைப்பின் செயற்பாடுகள்  காரணமாகஏற்பட்ட ஓர் அபிப்பிராய திரட்சிதான்.
இவ் அபிப்பிராயத்தை  உருவாக்கியதில்தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு பெரும்பங்குகிடையாது. அவர்கள் கூட்டமைப்புக்கு எதிராகதிட்டமிட்டு செயற்பட்டு உருவாக்கிய ஓர் அபிப்பிராயம் அல்லஇது. ஆனால் இந்த அபிப்பிராயமாற்றம் மக்கள் முன்னணிக்கு அனுகூலமானது. இந்த அபிப்பிராய மாற்றத்தை வாக்குகளாகத் திரட்டுவது என்பது அந்தக் கட்சியின்பிரசார உத்திகளிலேயே தங்கியிருக்கிறது.கடந்த ஐந்தாண்டுகளாக அக்கட்சியானதுஓர் இலட்சியவாதக் கட்சியாகவே  சிறுத்துக்காணப்பட்டது. திருப்பகரமான தருணங்களில் அறிக்கைகளை விடுவது, பேட்டிகளை வழங்குவது என்பதற்குமப்பால் அக்கட்சியானது அடிமட்ட வலையமைப்பைப் போதியளவுபலப்படுத்தியிருக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் அதற்கு இருந்த கவர்ச்சிதாயகத்தில் இருந்திருக்கவில்லை.
கடந்த ஆறு ஆண்டுகளில் தாயகத்தில்அக்கட்சி மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் பெரும்பாலானவற்றில் திரும்பத் திரும்ப ஒரே முகங்களேகாட்சியளித்தன. ஏறக்குறைய ஓரேயளவு தொகையினரே அவற்றில்பங்குபற்றினார்கள். அவ் எதிர்ப்பு நடவடிக்கைகளில்பங்குபற்றியவர்களின் தொகையை விடவும் அவைபற்றிய செய்திகளைச் சேகரிக்க வந்த ஊடகவியாளர்களின் தொகைஅதிகமாக இருந்தது. சில சமயங்களில் அவற்றைக்கண்காணிக்க வரும்  புலனாய்வாளர்களின்தொகை அதிகமாய் இருந்தது.
இப்பொழுதுகூட்டமைப்புக்கு எதிராகப் பரவிவரும் அதிருப்திக்கு மக்கள் முன்னணி உரிமைகோரமுடியாது. ஆனால் கடந்த ஆறுஆண்டுகளாக மிகக் குறைந்த தொகையினரோடுதம் அரசியல் இலக்குகளில் விட்டுக்
கொடுப்பின்றிநின்று நிலைத்ததன் பலனை அக்கட்சி இனிஅறுவடை செய்யக் கூடும்.கூட்டமைப்புக்குஎதிராக உருவாகியிருக்கும் ஓர் அதிருப்தி அலையைஅதன் தலைமை எவ்வாறு கையாளப்போகிறது

தனது பிரச்சாரப் பணிகளைத்தொடக்கி வைத்து திருமலையில் ஒருசந்திப்பில் சம்பந்தர் ஆற்றிய ஒரு உரையைஇங்கு சுட்டிக்காட்டலாம். ‘நாங்கள் பயணத்தை முடிக்கப்போகிறோம்என்று அவர் கூறுகிறார். ஆனால் மக்கள் முன்னணி இனித்தான்பயணத்தைத் தொடங்க முயற்சிக்கிறது என்றும்அவர் சுட்டிக்காட்டுகிறார்.
 ஓர் அரசியல் தலைவர் பயணத்தைமுடிக்கப் போகிறோம் என்று கூறுவது பொருத்தமானதா? அது வரலாற்றின் இயங்கியல்  விதிகளுக்குஏற்புடையதா? ஒரு கதைக்காக வரும்ஆண்டில் சம்பந்தர் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடித்துவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதோடுபயணம் முடிந்துவிடுமா

மூன்றாவதுதரப்பின்அழுத்தம் இன்றி அதை அமுல்படுத்தமுடியுமா? சிங்களக் கடும்போக்குவாதிகளிடம் இருந்தும் சிங்கள பௌத்த மயப்பட்டிருக்கும்அதிகாரகட்டமைப்பிடம் இருந்தும் நீதி நிர்வாகக் கட்டமைப்பிடம் இருந்தும்யுத்த எந்திரத்திடம் இருந்தும் அதைப் பாதுகாப்பதற்காக மேலும்எவ்வளவு காலம் போராட வேண்டியிருக்கும்? எனவே ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பயணங்கள் முடியப்போவதில்லை. ஆனால் சம்பந்தர் பயணத்தைமுடிக்கப் போவதாகக் கூறுகிறார். மக்கள் முன்னணியைவிமர்சிப்பதற்காகவே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்.
 தமிழர்கள் மத்தியில் உள்ள மிக மூத்ததலைவர் அவர். தனது பிரச்சார
மேடைகளில்தனிப்பட்ட தாக்குதல்களை அநேகமாகச் செய்ததில்லை. ஆனால் தனது சொந்தத்தொகுதியில் மக்கள் முன்னணியை விமர்சிப்பதற்காகஅவர் பழைய தோம்புகளை இழுத்துக்கதைத்திருக்கிறார். இவ்வாறு வழமைக்கு  மாறாக உரையாற்றியிருப்பது எதைக்காட்டுகிறது? கூட்டமைப்பு இதுவரையிலும் அனுபவித்து வந்த ஏகபோகத்திற்கு சோதனைவந்துவிட்டதை  அக்கட்சிஉணர்ந்துவிட்டது என்பதைத்தானே.?
எனவே வரவிருக்கும் தேர்தலில் தமிழ் வாக்களிப்பு பாரம்பரியத்தின்படியார் இனமான அலையை அதிகம்தூண்டுகிறார்களோ அவர்களுக்கே வெற்றிவாய்ப்புக்கள் அதிகமாய் இருக்கும். வாக்களிப்பு அலை ஒன்றைத் தூண்டுவதாகஇருந்தால் முழு அளவு எதிர்ப்புஅரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்கவேண்டியிருக்கும்.
இந்நிலையில்முழு அளவு எதிர்ப்பு அரசியல்பிரச்சாரத்தை முன்னெடுக்கப் போவது யார்? அல்லதுவாக்களிப்புப் பாரம்பரியத்தை மாற்ற வேண்டும். அதைக்  கூட்டமைப்பேசெய்ய வேண்டியிருக்கும். ஒரு தீர்வுக்கான மக்கள்ஆணையை கேட்க வேண்டியிருக்கும்.
யார் எதை முன்னெடுத்தாலும் இரண்டுகட்சிகள் மத்தியிலும் மேடைக் கவர்ச்சிமிக்க பேச்சாளர்கள்இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். இன்னாருடைய குரலுக்குக் கட்டுப்பட்டு மக்கள் ஆடாமல் அசையாமல்இருந்து பேச்சைக் கேட்பார்கள் என்று கூறுமளவிற்கு தமிழ்  மக்கள்மத்தியில் தங்க நாக்குகளோ, வெள்ளிநாக்குகளோ கிடையாதுகடந்தவாரகட்டுரையில் கூறப்பட்டதைப் போல தமிழ்த்தேசிய கோசங்களையு.என்.பியும் முன்வைக்கலாம்என்ற ஒரு நிலைமையே யாழ்ப்பாணத்தில்   காணப்படுகிறது. இந்நிலையில் வடமாகாணசபைத் தேர்தலின் போது உருவாக்கப்பட்டதைப் போலஒரு வாக்களிப்பு அலையை எந்தக் கட்சி  உருவாக்கப்போகிறது?
மக்கள்முன்னணியானது வாக்குகளைச் சிதறடிக்கிறது என்றும் அது
எதிர்த்தரப்புக்கேசாதகமாய் முடியும் என்றும் ஒரு வழமையான
 குற்றச்சாட்டு உண்டு. இது எங்கிருந்துதோற்றம் பெறுகிறது? மக்கள் முன்னணியை ஒருவெற்றியீட்டும் கட்சியாக பார்க்காதவர்கள்

 மத்தியில் இருந்தே இக்குற்றசாட்டு வருகிறது. வெற்றியீட்டும் கட்சிகள் வாக்குகளைத் திரட்டுகின்றன. தோற்கும் கட்சிகள் வாக்குகளைச் சிதறடிக்கின்றன. மக்கள் முன்னணி வாக்குகளைத்திரட்டுமா? அல்லது சிதறடிக்குமா?
26.07.2015

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இரணைமடு அரசியல் – இரவிரவாக வரலாற்றை இடித்தழித்த மைத்திரி

கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com