குறைந்த பட்ச பலத்தை பிரயோகிப்பது எப்படி ? – இணையங்களில் தீயாய் பரவும் இலங்கை பொலிஸ் தாக்குதல் வீடியோ !

srilankan-policeஉத்தேச தனியார்த் துறை ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுதந்திர வர்த்தக வலயப் பணியாளர்கள் 2011 ஆம் அண்டு வைகாசி மாதம் 16 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

அவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் 500ற்கும் அதிகமானவர்கள் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து கல்வீச்சு மற்றும் தடிகளால் தாக்க ஆரம்பித்ததாகவும் இதனால் பொலிஸ் நிலையத்துக்கும், சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டதாகவும் அன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கூறியிருந்தது.

பாதுகாப்புக் கருதி பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் மற்றும் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டதாகத் தெரிவித்த அரசாங்கம் பொதுமக்கள் மீது மிகக் குறைந்த அளவு பலத்தினைப் பிரயோகித்தே ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தது.

அன்றைய சம்பவத்தின்போது பொலிசார் பொதுமக்கள் மீது மேற்கெண்ட வன்மத் தாக்குதல் குறித்த வீடியோ தற்போது ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் “தோல்வி நிலையென நினைத்தால்” எனும் பாடல் பின்னணியுடன் இணையங்களில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*