குறைந்த அபராதம் ரூபா 25 ஆயிரமாக அதிகரிப்பு !

traffickபோதையில் வாகனம் செலுத்துதல் உள்ளிட்ட மிகப் பாரிய போக்குவரத்து விதி மீறல்களுக்கான மிகக் குறைந்தபட்ச அபராதத் தொகை ரூபா 25,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) நிதியமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பஸ், பாடசாலை போக்குவரத்து, முச்சக்கர வண்டி ஆகியவற்றின் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் பின்வரும் 7 விடயங்கள் தொடர்பில் குறித்த குறைந்தபட்ச அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

1. போதையில் வாகனம் செலுத்துதல்.
2. சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல். (முன்னர் ரூ. 2,500)
3. காப்புறுதியின்றி வாகனம் செலுத்துதல். (முன்னர் ரூ. 500)
4. இடது பக்கமாக முந்திச் செல்லுதல். (முன்னர் ரூ. 500)
5. அனுமதிக்கப்பட்ட வேகத்திலும் பார்க்க அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல். (முன்னர் ரூ. 1,000)
6. புகையிரத கடவைகளில், கவனமின்றி வாகனம் செலுத்துதல்.
7. சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை செலுத்த அனுமதித்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*