கிளிநொச்சியில் 97 மில்லியன் செலவில் நவீன வசதிகளுடன் தீயணைப்புப் பிரிவு

rajethaநவீன வசதிகளுடன் கூடிய தீயணைக்கும் பிரிவொன்றை 97 மில்லியன் ரூபா செலவில் செலவில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்தாபிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது என்று அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவிததுள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் அண்மையில் ஏற்பட்ட விபத்தின்போது அங்கு முறையான தீயணைப்பு வசதிகள் இல்லாமையால் 122 கடைகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட வியாபாரிகள் பாதிப்படைந்ததோடு அவர்களிற்கு 74 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டடிருந்தது.

இந்நிலையிலேய கிளிநொச்சியில் நவீன வசதிகளுடன் கூடிய தீயணைக்கும் பிரிவொன்றை ஆரம்பிக்கவும் பாதிப்படைந்த வர்த்தகர்களிற்கு நட்டஈடு வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியதாகவும் கிளிநொச்சியில் 150 மில்லியன் நிதியில் நிரந்தர சந்தைக் கட்டடம் ஒன்றினை அமைக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*