காணாமல் போனோர் தொடர்பில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன – பரணகம

இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான இறுதி அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பித்து விட்டதாக ஜானதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்து உள்ளார். யாழில் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. குறித்த அமர்வு நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , காணாமல் போனோர் தொடர்பில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளன. ஆனால் அவற்றில் சில ஒருவர் காணமல் போய் இருந்த சம்பவம் தொடர்பில் இரண்டு மூன்று முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளன. காணாமல் போனவரின் மனைவி , தாய் ,என இரண்டு முறைப்பாடுகளும் சில வேளைகளில் ஒருவர் காணாமல் போனது தொடர்பில் மூன்று முறைப்பாடுகள் கூட கிடைத்துள்ளன. அவ்வாறானவற்றை பரிசிலித்து வருகின்றோம். இதுவரையில் நாம் பரிசிலீத்ததில் சுமார் 500 முறைப்பாடுகள் அவ்வாறு ஒருவர் காணாமல் போனது தொடர்பில் இரண்டு மூன்று முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளமையை கண்டறிந்து உள்ளோம். எனவே இதுவரையில் எமக்கு காணாமல் போனோர் தொடர்பில் எத்தனை முறைப்பாடு கிடைக்க பெற்று உள்ளன என கூற முடியாது. அத்துடன் காணாமல் போனோர் தொடர்பில் 1983ம் ஆண்டு முதல் முறைப்பாடுகள் கிடைக்க பெற்று உள்ளன. அவற்றில் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2009ம் ஆண்டு மே மாதம் 18 திகதி வரையிலான காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்க பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்தவற்றின் இறுதி அறிக்கையை பாராளுமன்றில் சமர்பித்து உள்ளேன். அதேபோன்று இறுதி யுத்தத்தின் போது கணிசமான பொது மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான எண்ணிக்கையை சரியாக கூற முடியாததால் எண்ணிகையை என்னால் வெளியிட முடியாது. ஆனாலும் கணிசமான அளவு பொது மக்கள் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டார்கள் என்பது மட்டும் உண்மை என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*