கட்சிக்குள் மாற்றுக் கருத்து எழுவது ஜனநாயகப் பண்பே – வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா

thavarasa1வடக்கு மாகாண சபையின் எதிா்க் கட்சி தலைவா் பதவியிலிருந்து நீக்கி அந்த இடத்திற்கு கிளிநொச்சியின் ஈபிடிபியின் மாகாண சபை உறுப்பினா் வை.தவநாதனை நியமிக்குமாறு ஜக்கிய மக்கள் சுந்தர முன்னணியின் பொதுச் செயலாளருக்கு ஏன் கடிதம் எழுதியிருந்தீர்கள் என்பதை டக்ளஸ் தேவானந்தாவிடமே கேட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண எதிா்க் கட்சி தலைவா் சி.தவராசா கடிதம் எழுதுவதற்கு முன் தன்னுடன் எதையும் கலந்தாலோசிக்கவில்லை எனவும்தெரிவித்துள்ளார்.

ஒரு ஜனநாயக கட்சிக்குள் மாற்றுக் கருத்துக்களை கொண்டவா்களும், எதிா்க் கருத்துக்களை கொண்டவா்களும் இருப்பது வழமை, அதுவே ஜனநாயகத்தின் பண்பு. எனவே இதனை கருத்து முரண்பாடு என்று சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் எதிா்க் கட்சி தலைவா் பதவியிலிருந்து தவராசாவை நீக்குமாறு ஜக்கிய மக்கள் சுந்தர முன்னணியின் பொதுச் செயலாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கடிதம் அனுப்பியமை தொடர்பில் கட்சிக்குள் முரண்பாடா என தவராசாவை கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இவ் விடையம் தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

தானாக கட்சியை விட்டுவிலக மாட்டேன் எனவும் அத்தோடு சுழற்சி முறையில் வடக்கு மாகாண சபையின் எதிா்க் கட்சி தலைவா் பதவியை ஈபிடிபி கட்சியின் உறுப்பினா்களுக்கிடையே பகிா்ந்துகொள்வது என்ற உடன்படிக்கையோ, அல்லது கதையாக கூட பேசப்படவில்லை எனவும் தன்னுடன் மட்டுமல்ல முதலில் இருந்த கமலுடனும் இவ்வாறு எந்த பேச்சும் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்த அவர் அந்த காலத்தில் கட்சியில் இவ்வாறான பணிகளை தான் செய்தவன் என்ற அடிப்படையில் இதனை கூறுகின்றேன் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு இந்தப் பிரச்சினை தற்போது வெளியாகிய நிலையில் இதுவரை இது பற்றி தன்னை அழைத்து டக்ளஸ் தேவானந்த எதுவும் பேசவில்லை எனவும் குறிப்பிட்டாா்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*