உத்தேச அரசியல் யாப்பு அதிகாரப்பகிர்வு விடயம் குறித்து பிரதமர் கருத்து

ranilஇணக்கப்பாட்டு அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவிற்கு பின்னர் புதிய அரசியலமைப்பு வகுக்கப்பட்டு அதற்கமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நாட்டிற்கான புதிய அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

அமரர் மாதுலுவாவே சோபித தேரரின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நேற்று(08) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வின் போது பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி அடங்கலாக மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகள் தரப்பில் முதலமைச்சராக செயல்பட்டவர்களது கருத்துக்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. தழிழ்தேசிய கூட்டமைப்புடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். உள்ளுராட்சி மன்றங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் அதிகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.

ஆறு உபகுழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்டை உரிமைப்பிரச்சினைகள் சட்டம் மற்றும் ஒழுங்கு அதிகாரப்பகிர்வுக்கிடையில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து ஆலோசனையை விரைவில் அரசாங்கம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கையை பகிரங்கமாக அரசியல் யாப்பு பேரவையில் கலந்தரையாடப்படும். அனைத்து கட்சிகளினதும் குழுக்களும் இதுதொடர்பில் இதன்போது இணக்கப்பாட்டுக்கு வரமுடியும்.

எந்தவொரு கட்சிக்கும் பாராளுமன்றத்தில் அல்லது கட்சிக்குள்ளும் பெரும்பான்மை இல்லை. எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கி பயணிக்கவேண்டும் என்று தெரிவித்தார். அடிப்படை ரீதியில் பெரும்பான்மையான விடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதிலேயே கேள்வி நிலவுகின்றது என்றும் தெரிவித்தார்.

இப்புதிய அரசியலமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதோ அல்லது பாராளுமன்றத்துடையதோ அல்லாது மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அது அமைவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*