இ.தொ.காவின் 77வது மேதினம் மக்களுக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளது – ஆறுமுகன்

IMG_2643இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மலையக மக்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். இதன் ஊடாக தொழிலாளர்களின் சம்பள உயர்வை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுப்பேன். இன்று மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினையாக காணப்படும் சம்பள பிரச்சினைக்கு இ.தொ.கா தக்க தருணத்தில் தீர்வு கானும் என்பதை இன்று உறுதியுடன் இங்கு தெரிவிக்கின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா நகர மத்தியில் 01.05.2016 அன்று இடம்பெற்ற இ.தொஇகாவின் 77வது மே தினத்தை தலைமை தாங்கி நடத்திய கட்சியின் பொது செயலாளர் மேலும் தெரிவித்ததாவது,

பாராளுமன்றத்தில் சம்பளத்தை பெற்றுத் தருகின்றேன் என கூறி பெற்றோல் கேனுடன் சென்றார்கள். பச்சை குழந்தைக்குகூட தெரியும். பாராளுமன்றத்திற்கு பெற்றோல் கேனுடன் செல்ல கூடாது என்று.

சிலர் அரசாங்கத்திடம் 2500 ரூபாய் பெற்றுத் தருகின்றேன் என கோரினார்கள். இன்று அதன் நிலை என்ன ? (இதன்போது மக்கள் கிடைக்கவில்லையே என கூக்குரல் இட்டனர்).

எது எவ்வாறாக இருந்தாலும் ஆரம்ப காலம் தொட்டு தொழிலாளர்களுக்கு சம்பளத்தை பெற்றுக்கொடுத்தது இ.தொ.கா தான். எனது மக்கள் எனக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். காலம் பிறக்கும் பொழுது அதனை பெற்றுக்கொடுப்பேன்.

நுவரெலியாவில் இ.தொ.காவின் மே தின விழா ஆறுமுகன் தொண்டமானுக்கு கருமாதி விழா என தோட்டங்களில் சிலர் போஸ்டர்கள் ஒட்டினார்களாம். யாருக்கு கருமாதி என்பதை பொறுத்திருந்து பார்க்கட்டும்.

இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த கூட்டத்தையும் அடக்கி அவர்கள் கொட்டத்தையும் அடக்குகிறேன். பொறுத்திருக்கட்டும் என மக்கள் மத்தியில் இ.தொ.காவுக்கு எதிராக செயற்படுபவர்களை சுட்டிக்காட்டி பேசினார்.

இன்று தேயிலை விலை உலக சந்தியில் குறைவாக காணப்படுகிறது. இந்நேரத்தில் சம்பளத்தை கேட்டால் 20 சதம், ஒரு ரூபாய் என கம்பனிகாரர்கள் வழங்க முன்வருவார்கள். இதெல்லாம் வைத்து எப்பொழுது தாக்க வேண்டும்மோ அந்த வேளையில் தாக்குவேன். உங்களுடைய பாக்கட்டில் ஆயிரம் ரூபாவை வைப்பேன்.

எவ்வாறயினும் தொழிலாளர்களின் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது இ.தொ.கா தான். இங்கு வருகை தந்துள்ள சுனாமி அலை போல் திரண்ட தோட்ட தொழிலாளர்கள் இ.தொ.காவின் பலத்தை ஏனையவர்களுக்கு உணர்த்திவிட்டது.

வீதியை மறித்து மேடை அமைக்க வேண்டாம் என கோரிய அதே இடத்தில் மேடை அமைத்து 77வது மேதினத்தின் வெற்றியை மக்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது என இதன்போது கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*