இலங்கையர்கள் 32 பேர் ஐ.எஸ் இல் இணைவு – நீதி அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

vakeesam-braking-newsஇலங்கையிலிருந்து 32 பேர், சிரியாவிற்குச் சென்று ஐ.எஸ். போராட்டக் குழுவோடு இணைந்துவிட்டதாக, புத்தசாசனம் மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ இன்று (18) பாராளுமன்றில் தெரிவித்தார்.

இவ்வாறு சென்றவர்களில் நான்கு குடும்பங்களும் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதியமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், இன்று முதல் இனவாத அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு நாட்டில் இடமில்லை என்றும் நீதியமைச்சர் கூறியுள்ளார்.

சில இணையத்தளங்கள் ஊடாக உண்மையற்ற மற்றும் அடிப்படைவாத செய்திகளை வௌியிடுவதாகவும், இதனால மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் நாட்டில் வௌிநாட்டு புலனாய்வு சேவைகள் சில இயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*