இறுதி வரைபை சமர்ப்பிக்க 10 திகதி கூடுகிறது தமிழ் மக்கள் போரவை

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள இறுதி வரைபை சமர்ப்பிக்க 10 திகதி தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் கூடுகிறது என அவ் அமைப்பு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திக் குறிப்பு:  (08-04-2016)
தமிழ் மக்கள் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூடுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மிகவும் குறுகிய காலத்தில், அதே டிசம்பர் மாதம் 27ஆம் திகதி அன்று தனது இரண்டாவது கூட்டத்தொடரை நடாத்தி அன்றைய தினம் ஒரு அரசியல் நிபுணர் குழுவை நியபித்து அக்குழு ஒரு மக்கள் பங்களிப்புடனான தீர்வுத்திட்ட வரைபை தயாரிப்பதற்கான முன்வரைபு ஒன்றை தயாரிக்க முழுவீச்சுடன் செயற்பட வேண்டப்பட்டது.
இவ் நிபுணர் குழு ஜனவரி  2 ஆம் திகதி அன்று தனது வேலைத்திட்டத்தை  ஆரம்பித்து, அதே ஜனவரி 31ஆம் திகதி அன்று பேரவையின் மூன்றாவது கூட்டத்தொடரில் முன்வரைபை சமர்ப்பித்தது.
இம்முன்வரைபானது, கடந்த இரண்டு மாதங்களாக, அதாவது பெப்பிரவரி, மார்ச் மாதங்களில் மக்கள் மத்தியில் இயன்றளவு கொண்டு செல்லப்பட்டு மக்களின் கருத்தறியப்பட்டது. அத்துடன்இ மக்கள் தமது கருத்துக்களை பல வழிகளிலும் பேரவையிற்கு அனுப்பி வைப்பதற்கான தொடர்புகள் அறிவிக்கப்பட்டு மக்களிற்கான களம் பகிரங்கமாக திறந்து விடப்பட்டது.
வட கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் பல மட்ட கூட்டங்கள்இ சந்திப்புக்கள் நடாத்தப்பட்டு மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் மக்கள் கருத்தறியும் செயற்திட்டம் முடிவிற்கு வந்தது.
கடந்த முதலாம் திகதி முதல் நிபுணர் குழு மீண்டும் தொடராக கூடி எதிர்வரும் 10ஆம் திகதி அன்று பேரவையின் நான்காவது கூட்டதொடரில் இறுதி வரைபை சமர்ப்பிக்கவுள்ளனர். பேரவையால் அங்கீகரிக்கப்படும் இவ் இறுதி வடிவம், தமிழ்த் தலைமைகளிடமும், சர்வதேச சமூகத்திடமும் நேரடியாக கையளிக்கப்படும்.
இந்திலையில் பேரவையின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கூடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*