சற்று முன்
Home / செய்திகள் / “ஆலய வழிபாட்டில் சமத்துவம் வேண்டும்” – வரணி மக்கள் சத்தியாக்கிரக போராட்டம்

“ஆலய வழிபாட்டில் சமத்துவம் வேண்டும்” – வரணி மக்கள் சத்தியாக்கிரக போராட்டம்

“ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும், ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்“ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்பாள் ஆலய முன்றலில் சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் குறித்த ஆலயத்தில் தேர் உற்சவத்தின் போது பிற சமூகங்கள் தேர் வடம் பிடிக்க கூடாது என்று தெரிவித்து ஜேசிபி கனரக வாகனம் மூலம் தேர் இழுக்கப்பட்டது.

இந்த வருடத் திருவிழாவும் மிக நூதனமான மிறையில் நன்கு திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.

இதனால் கவலை அடைந்த மக்கள் தென்மராட்சி பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடத்தினர். ஆனால் அங்கும் எதுவும் பயனளிக்காத நிலையில் இன்று ஆலய முன்றலில் கொட்டகை அமைத்து சத்தியா கிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், புதிய ஜனநாயக மாஸ்சிச லெனின் கட்சியின் வட பிராந்திய செயலாளர் செல்வம் கதிர்காமநாதன், சமுக நோய்க்கான வெகுஜன அமைப்பு இணைப்பாளர் தனுஜன் மற்றும் சிமிழ் கண்ணகைபுர கிராம மக்கள் எனப் பலர் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com