அதிவேக நெடுஞ்சாலை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு வரை

luxnanமத்திய அதிவேக நெடுஞ்சாலை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு வரை நீடிக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்திற்காக 400 கோடி அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஹம்பாந்தோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மூலம் அனைத்தும் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணி 2020ம் ஆண்டளவில் முழுமையாக பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறினார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையில் 50 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 4 கட்டப் பணிகளின் கீழ் இந்த நிர்மாணப் பணிகள் இடம்பெறுகின்றன. இதில் 2வது கட்டப் பணிகள் உள்ளுர் ஒப்பந்ததக்காரர்கள் மூலம் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோப் அறிக்கை தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில் ,
அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதில் கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடைமுறைகளை தற்போதைய அரசாங்கம் மாற்றியுள்ளது. அனைத்து மதிப்பீட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்னரே இந்த நிர்மாணப் பணிகள் இடம்பெறும். இதன் மூலம் வீதிகளை அமைப்பதில் இடம்பெறும் செலவை 20 சதவீதத்தினால் குறைப்பதற்கு அரசாங்கத்தினால் முடிந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். வீதிஅபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக நன்மைகள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*