அச்சுவேலி நிலம் தாழிறங்குவது குறித்து ஆராய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை

kajanthaயாழ்ப்பாணம் அச்சுவேலி பிரதேசத்தில் நிலம் தாழிறங்குவதற்கான காரணங்களை கண்டறிவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த நிலப்பகுதியில் எதிர்காலத்தில் பயன்படுத்துவது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கஜந்த கருணாதிலக இன்று தெரிவித்தார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் மூலம் இதற்கான ஆய்வினை மேற்கொள்வது தொடர்பாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*