‎இரவு புகையிரதம்‬ மோதி மருதனார்மடத்தில் யுவதி பலி !

trainயாழ்ப்பாணம் மருதனார் மடத்திற்கு அருகில் ‎புகையிரதம்‬ மோதி யுவதியொருவர் இன்று (சனிக்கிழமை) இரவு உயிரிழந்துள்ளார். இது விபத்தா ? தற்கொலையா ? என்பது தொடர்பில் உடனடியாக தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

இச்சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் மருதனார் மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சுன்னாகம் சபாபதிபிள்ளை வீதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெமின்சினா (வயது 18) என்ற பெண் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை கோண்டாவிலில் இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி உயிரிழந்து இருந்தனர்.
இன்றைய தினம் உயிரிழந்த மூவரும் ஒரே வயதை ஒத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds