ஹெரோயினுடன் இரண்டு இளைஞர்கள் கைது..

vlcsnap-2016-10-14-15h59m01s260மோட்டார் சைக்கிளில் பண்டாரவளை பிரதேசத்திலிருந்து வெல்லவாய பிரதேசத்திற்கு கொண்டு சென்றுக் கொண்டிருந்த ஒரு தொகை ஹெரோயினுடன் இரண்டு இளைஞர்களை எல்ல பொலிஸார் 14.10.2016 அன்று மாலை எல்ல நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினை அடிப்படையாகக் கொண்டு குறித்த சந்தேக நபர்களை சோதனையிடும் போதே இவ் ஹெரோயின் தொகையினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது இவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும், 02 தொலைபேசிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த ஹெரோயின் தொகையின் சந்தை பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து இருபது ஆயிரம் ரூபாய்கள் இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரு இளைஞர்களும் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds