ஹெராயின் கடத்தல் – மேலும் மூவர் கைது

இலங்கையில் அண்மையில் பெருந்தொகையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பம் தொடர்பில் மூன்று இலங்கையைர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் தங்களது வழக்கறிஞர்களுடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் சரணடைந்துள்ளனர் எனவும், ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சரணடைந்த இருவரும், தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தலஹேன மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டவர் கொழும்பை அண்டியுள்ள தெஹிவளை பகுதியைச் சேர்ந்தவர் என போலீஸார் மேலும் தெரிவித்தனர்.
இவர் இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பியபோது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டடார்.
இலங்கையின் தென் கடற்பரப்பில் வைத்து இரானியர்களுக்கு சொந்தமான படகொன்றிலிருந்து 101 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டது.
இதனை கடத்தினார்கள் என்ற சந்தேகத்தில் இரானியர்கள் மற்றும் பாகிஸ்தானியர் என 14 வெளிநாட்டவர்கள் அப்போது கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னணியில், தற்போது மூன்று உள்நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds