சற்று முன்
Home / உலகம் / ‘ஹிலரியை ஜனாதிபதி ஆக்குங்கள்’- 46 லட்சம் பேர் மனு

‘ஹிலரியை ஜனாதிபதி ஆக்குங்கள்’- 46 லட்சம் பேர் மனு

hill_2_600_17325நவம்பர் 8 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஆனால், ‘பாப்புலர் ஓட்டு’ என்று கூறப்படும் ஓட்டு சதவிகிதத்தில் ஹிலரி ட்ரம்பை விட 25 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்றார். கடந்த வாரம் மிகவும் குறைந்த அளவிலான ஓட்டுகள் வித்தியாசத்தில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் பெட்டிஷன் சமர்ப்பிக்கும் இணையதளமான Change.org-யில் ‘ஹிலரியை ஜனாதிபதி ஆக்குங்கள்’ என்ற பெட்டிஷன் உருவாக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 46 லட்சம் பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.

இந்த பெட்டிஷனில்,’டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பவில்லை. உண்மையான தேர்தல் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபறுகிறது. எலக்டோரல் காலேஜின் 538 வாக்களர்கள் யாருக்கு வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்களோ, அவர் தான் ஜனாதிபதியாக பதவியேற்க முடியும். நாங்கள் அந்த வாக்களர்களுக்கு ட்ரம்ப்பிடம் இருந்து அரசியல் சாசனத்தை காக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.’ என்று கூறப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com