ஹல்தமுல்லை பிரதேச செயலக வாளாகத்தில் சத்தியாகத்திரக போராட்டம் 7 ஆவது நாளாக முன்னெடுப்பு

20160926_134035மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு மாகந்த தொழிற்சாலையில் தங்கியுள்ள இருவர், ஆரம்பித்திருந்த சத்தியாகத்திரக போராட்டம் 7 ஆவது நாளாக 26.09.2016 அன்றும் தொடர்கின்றது.

கடந்த 6 நாட்களாக பண்டாரவளை நகர பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள சுற்றுவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த சத்தியாக்கிரகம் 26.09.2016 அன்று ஹல்தமுல்லை பிரதேச செயலக வாளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதாக தெரிவித்து பிரதேச செயலகத்திற்கு அழைப்பட்ட தங்களுக்கு உரிய பதில் வழங்கவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து ஹல்தமுல்லை பிரதேச செயலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறித்த பெண்கள் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com