ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்கக் கோரிக்கை

வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவியான கரிஸ்ணவியின் படுகொலைக்கு நீதிகேட்டு 24.02.2016 புதன்கிழமை நடைபெறவுள்ள இயல்பு நிலையை முடக்கும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு  தனது ஆதரவை தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்  ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. 
இதுதொடர்பில் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று – தமிழ் பாரம்பரியத்தின் பண்பாட்டு விழுமியங்களைத் தொலைத்த நிலையில் ஊசலாடி நிற்கும் தமிழ் கலாசாரத்தை மீட்டெடுக்கவேண்டிய தேவை காவல்துறையினதும் சட்டத்துறையினதும் கையிலேயே உள்ளது. ‘காலம் பிந்திய நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமனாகும்’ என்னும் கோட்பாட்டுக்கிணங்க – இதுவரை சரண்யா, வித்தியா, சேயா போன்றோருக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்படாமையே – இன்று கரிஸ்ணவியின் நிலைக்கு காரணமாய் அமைந்துவிட்டது. இதுதொடருமாக இருந்தால் – பெண்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலையேற்படுவதுடன், வன்கொடுமைப் பட்டியல் நீண்டுகொண்டு செல்வதற்கே வழிவகுக்கும். வித்தியா கொலைக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து நீதி வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்திருந்தும் ஒருவருடமாகியும் தண்டனை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதானது – அரசின் மீதும் நீதித்துறையின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கச்செய்கின்றது. இந்த நிலையில் – அடுத்து வந்த இந்த வருடத்தில் – இன்று மாணவி கரிஸ்ணவி பலியாக்கப்பட்டுள்ளாள். இந்தகைய சம்பவங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதுடன் – 24.02.2016 அன்று நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். 


ஜோசப் ஸ்ராலின் 
பொதுச் செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சங்கம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com