ஹட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி விபத்து


மஹியாங்கனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் பத்தனை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அருகில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

22.02.2017 அன்று அதிகாலை 2.30 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள – பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுப்பன்றிகள் கூட்டமாக பிரதான வீதியை கடந்து செல்லும் போது அதை கண்டு லொறியை கட்டுப்படுத்த முயன்றபோது கட்டுப்பாட்டுக்கு அப்பால் லொறி குடைசாய்ந்ததாக லொறியின் ஓட்டுனர் தெரிவித்தார்.

லொறியில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், எனினும் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த லொறியில் இருந்த 3 கியூப் மணல் கொட்டி வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com