ஹட்டன் – நோர்வூட் பகுதியில் காட்டுத் தீ

மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் – நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு சொந்தமான நிவ்வெளி தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் 19.01.2016 அன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியளவில் காட்டுத் தீ பரவியுள்ளது.
இந்தக் காட்டுத்தீயில் 15 ஏக்கர் காடு தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த பகுதியில் எவராவது தீ வைத்ததால் இந்த தீச் சம்பவம் இடம்பெற்றதா? அல்லது இயற்கையான காட்டுத்தீயா? என இதுவரை தெரியவில்லை என நோர்வூட் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் இந்த தீச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை குறித்த தீயை கட்டுப்படுத்த நோர்வூட் பொலிஸார் செயற்பட்டதன் பயனாக சில மணிநேரங்களின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இளஞ்செழியனின் மெய்பாதுகாப்பாளரின் உடலுக்கு வடக்கு முதல்வர் அஞ்சலி!

யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் உடலுக்கு வடக்கு முதலவர் சி.வி. ...

Read More »

மாங்குளம் பகுதியில் ரயில் விபத்தில் ஒருவர் பலி!

மாங்குளம், குஞ்சுக்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நேற்று இரவு வவுனியாவைச் சேர்ந்த தனியார் பேருந்து சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு ...

Read More »

தாக்குதல் சம்பவம் புலிகளை ஞாபகப்படுத்துகின்றது! – மகிந்த ராஜபக்ஷ

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட தாக்குதல், விடுதலைப்புலிகளின் ஆரம்ப காலச் செயற்பாட்டைத் தனக்கு ஞாபகப்படுத்துவதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை தடுக்கும் முயற்சியில் மஹிந்த அணி!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்கும் சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ள நிலையில், அதற்கெதிராக நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ...

Read More »

மட்டக்களப்பில் மக்கள் நடத்திய தாக்குதலில் 2 அதிரடிப்படையினர் காயம்!

மட்டக்களப்பு செங்கலடியில் மண் ஏற்றிக்கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்த அதிரடிப்படையினர் நான்கு பேரை சுற்றி வளைத்து பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். ...

Read More »

நல்லூர் சூட்டுச் சம்பவம் – சரணடைந்தார் பிரதான சந்தேக நபர்

நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான முக்கிய சந்தேசநபர் இன்று காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவரது பெயர் செல்வராசா ...

Read More »

இந்த மாத இறுதிக்குள் கேப்பாபிலவை விடுவிக்குக! – சம்பந்தன் மைத்திரிக்கு கடிதம்

இந்த மாத இறுதிக்குள் கேப்பாபிலவுக்காணிகளை விடுவிக்க வேண்டும் .அத்துடன்காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் ஆக்கபூர்வமான வழிமுறைகளை உள்ளடக்கிய நிகழ்ச்சித்திட்டமொன்றை அரசை தயாரிக்க வேண்டும் என்று கோரி இலங்கை ஜனாதிபதிக்கும், ...

Read More »

காபூலில் தற்கொலை குண்டு தாக்குதல்: 24 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் தற்கொலை குண்டு வெடித்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தது 42 பேர் காயமடைந்துள்ளனர்; பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் ...

Read More »

தொழினுட்ப பிரச்சினையே மின்தடைக்கு காரணம் – சீராகும்வரை மின்வெட்டு தொடரும்

கெரவலபிட்டிய மின்சார உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப பிரச்சனையே மின்தடைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழினுட்டப் பிரச்சனை சீராகும்வரை குறிப்பிட்ட சில பிரதேசங்களில் மின்சாரம் மட்டுப்படுத்தி வழங்கப்படும் ...

Read More »
vakeesam Like Page close[x]
Or wait 30 seconds