ஹட்டனில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்த வாகனம்!

ஹட்டன், மல்லிகைப்பூ சந்தி பகுதியில் இன்று (15) காலை வான் ஒன்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த இந்த வேன், ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் மல்லிகைப்பூ சந்தி பகுதியில் பாதையை விட்டு விலகிய வேன் பள்ளத்தில் பாய்ந்து ஹட்டன் ஓயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேனில் 6 பேர் பயணித்த நிலையில், பெண் ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து பற்றி மேலதிக விசாரணையை ஹட்டன் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com