ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 9 புதிய அமைப்பாளர்கள்!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அம்பாறை, கொழும்பு, மாத்தறை, மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான அமைப்பாளர்களே இன்றைய தினம் நியமனம் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திற்கு மாத்திரம் ஐந்து அமைப்பாளளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைப்பாளர்கள்

1. நலீன் குணசேக்கர  – கொழும்பு மாவட்டம்

2 மீரா லெப்பை ரெபுபாசம்  – அம்பாறை மாவட்டம்

3. நவநீதராஜா              – அம்பாறை மாவட்டம்

4. ஐ.எச். அப்துல் வஹாப்  – அம்பாறை மாவட்டம்

5. டீ.ரபாய்தீன் – அம்பாறை மாவட்டம்

6. பிரநீத் பத்மதிலக  – மாத்தறை மாவட்டம்

7. எம்.எச்.எம். சகரியா         – இரத்தினபுரி மாவட்டம்

8. ஆரியரத்ன விஜேவிக்ரம  (மகா ஓய பிரதேசம்) அம்பாறை மாவட்டம்

9. சுஜீவ கொடலியத்த  – மாத்தளை மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com