சற்று முன்
Home / செய்திகள் / வைரஸ் தொற்று – பாடசாலைகளுக்கு விடுமுறை !!

வைரஸ் தொற்று – பாடசாலைகளுக்கு விடுமுறை !!

தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் தொற்று காரணமாக, தெற்கிலுள்ள சகல முன்பள்ளிகளும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த தொற்று பரவிச் செல்லும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில், ஆரம்பப் பிரிவுகளை நாளையும் (22) நாளை மறுதினமும் (23) மூடுவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண கல்வியமைச்சர் சந்திமா ராசபுத்ர தெரிவித்துள்ளார்.

“குறித்த தொற்றானது சிறுவர்களிடம் பரவிச் செல்வதன் காரணமாக வைத்தியசாலைகளின் சிறுவர் பிரிவுகளில் அதிக இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விசேட வைத்திய நிபுணரின் அறிவுரைக்கமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, தென் மாகாணத்தின் மாத்தறை, அக்குரஸ்ஸ, தங்கல்ல, வலஸ்முல்ல மற்றும் காலி ஆகிய வலயங்களிலுள்ள சகல பாடசாலைகளினதும் முதலாம் தரம் தொடக்கம் 5ஆம் தரம் வரையான வகுப்புகளுக்கு நாளையும்,(22), நாளை மறுதினமும் (23) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com