வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு

டயகம பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்களை அங்குள்ள வைத்தியர்கள் முறையாக பரிசோதனை செய்தாலும் வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர்கள் பாரபட்சம் காட்டுவதாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 28 ம் திகதி அன்று டயகம தோட்ட பகுதியில் இருந்து முதியோர் ஒருவர் ஆஸ்துமா நோய்யினால் பீடிக்கப்பட்டு அவரின் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

கடுமையான வருத்தத்தின் காரணமாக சம்பந்தப்பட்ட முதியோர்க்கு சேலன் ஏற்றப்பட்டது இவரின் பாதுகாப்பிற்காக தனது பேரனும் வைத்தியசாலையில் முதியோர்க்கு துனையாக தங்கியுள்ளார்.

முதியோர்க்கு வைத்தியர்களால் செலுத்தப்பட்ட சேலைன் மருந்து  இரவு 12 மணியளவில்  முடிவடைந்துள்ளது.

ஆனால் வைத்திய ஊழியர்கள் இரவு சேவையில்  வைத்தியசாலையில் இருந்த போதிலும் எவரும் முதியோரின் வைத்திய நிலையில் அக்கறை கொள்ளவோ அல்லது  சேலைன் போத்தல்களை அப்புறபடுத்தவோவில்லையெனவும் பல முறை ஊழியர்களை அழைத்தபோதிலும் பாராமுகமாக அவ் ஊழியர்கள் இருந்ததன் காரணமாக அதனை தானாகவே அப்புறபடுத்தியதாக நோயாளி தெரிவித்தார்.

இதே போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இவ்வைத்தியசாலைகளில் இரவு வேளைகளில் இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இடம்பெறுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை கடந்த வாரத்தில் இப்பகுதியில் உள்ள தோட்டமொன்றில் கடமை புரியும் தோட்ட உதவி அதிகாரி ஒருவர் விசபூச்சி கடிக்கு ஆளாகி சிகிச்சை மேற்கொள்ள இரவில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

இவருக்கு அங்கு உச்ச கட்ட கவனிப்பு இவ்வைத்தியசாலையின் ஊழியர்களால் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் சாதாரண மக்களுக்கு எவ்வித அப்படை சலுகைகளும் வழங்கப்படுவதில்லையென  குற்றம் சுமத்தப்படுகின்றது.

அத்தோடு இரவு நேரங்களில் வாட்டு கங்கானிகள் வாட்டில் தங்காமல் நோயாளர்களை தனிமையில் விட்டு விட்டு நகரில் நடமாடுவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட சுதேச வைத்திய சேவை பிரிவின் உயர் அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் ஆகியோர் கவனத்திற்கொள்ளவேண்டுமென  இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com