சற்று முன்
Home / செய்திகள் / வைத்தியசாலைகளில் ஒரு கொரோனா நோயாளி இருந்தால் அவா் ஊடாக 200 பேருக்கு பரவும் அபாயம் உள்ளது

வைத்தியசாலைகளில் ஒரு கொரோனா நோயாளி இருந்தால் அவா் ஊடாக 200 பேருக்கு பரவும் அபாயம் உள்ளது

வைத்தியசாலைகளில் ஒரு நோயாளி இருந்தால் அவா் ஊடாக 200 பேருக்கு பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாாிகள் சங்கத்தின் வடமாகாண உறுப்பினா்களான மருத்துவ அதிகாாிகள் எச்சாிக்கை விடுத்துள்ளனா்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துக் கூறும்போதே இவ்வாறு கூறியுள்ளனா். இதன்போது மேலும் அவா்கள் தொிவிக்கையில்,

வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த கிளினிக்கு வருவோரை கட்டுப்படுத்தும் முகமாக சில தீர்மானங்களை எடுத்துள்ளோம். அதாவது வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு இடையில் இடைவெளிகளை பேணும் நோக்குடன் நோயாளிகள் காத்திருக்கும் கதிரைகளில் ஒன்று விட்ட ஒரு கதிரையில் நோயாளிகள் உட்காரும் முகமாக ஒன்று விட்ட ஒரு கதிரைக்கு ஸ்ரிக்கர் ஒட்டியுள்ளோம்.

ஸ்ரிக்கர் ஒட்டிய கதிரைகளில் உட்கார வேண்டாம் என அவர்களை அறிவுறுத்தி உள்ளோம். அதேவேளை சுத்திகரிப்பு பணிகளை மூன்று வேளைகளிலும் மேற்கொள்கின்றோம்.அத்துடன் பொது இடங்களில் இருக்கும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,

வீட்டில் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்தி விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம்.

மிக அத்தியாவசிய தேவை இல்லாமல் வைத்தியசாலைக்கு செல்லாதீா்கள்..

அடுத்து மாதாந்த கிளினிக் வருவோரில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வைரஸ் இலகுவாக பரவி விடும். அதனால் கிளினிக் வருவோர் கட்டாயமாக மருத்துவரை சந்திக்க வேண்டும் எனும் தேவை இருப்பின் மட்டும் கிளினிக் வரலாம். மருத்துவரை பார்க்க வேண்டிய தேவை இல்லாவிடின் அவர்கள் உறவினர்கள் மூலம்

தமது கிளினிக் கொப்பியை கொடுத்து மருந்தை பெற்றுக்கொள்ளலாம்.அதேபோன்று வைத்தியசாலைகளில் தங்கியுள்ள நோயாளர்களை பார்வையிட வரும் பார்வையாளரை கட்டுப்படுத்தி உள்ளோம் ஒரு நோயாளியை ஒருவர் அல்லது இருவர் மட்டுமே

பார்வையிட அனுமதிக்க முடியும். அதற்காக மீண்டும் பாஸ் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய நிலமைகளை கருத்தில் கொண்டு நோயாளர்களும் அவர்களின் உறவினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com