வைகோவின் விலகல் – கருத்துச் சொல்லும் தலைவர்கள்

11-1447233675-vaiko-vijayakanth-vasamவைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும், முதல்வராகும் வாய்ப்பு கிடைக்காததால் வைகோ,  போட்டியிலிருந்து விலகியிருக்கலாம் என்று திமுக உள்ளிட்ட கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக மதிமுகவை சேர்ந்த விநாயகா ரமேஷ் இன்று திடீரென வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அடுத்த நிமிடமே கோவில்பட்டில் தொகுதியில் போட்டியிடவில்லை என்று வைகோ திடீரென அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு கட்சியினரை மட்டுமல்லாமல், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களையும் அதிர வைத்துள்ளது.

வைகோவின் இந்த முடிவு குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

“வைகோ போட்டியிடவில்லை என்ற அறிவிப்பு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்து தேர்தலில் போட்டியிட வேண்டும். கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் வைகோ திமுக மீது புகார் கூறியிருக்கிறார். மக்கள் நலக்கூட்டணியில் ஒருபோதும் குழப்பம் ஏற்பட்டதில்லை. முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என வைகோ விரும்பியதில்லை”
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்

சாதி மோதல் ஏற்படாமல் தடுக்க வைகோ இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என்றும், போட்டியிட்டு பதவிக்கு வருவதை விட சமூக ஒற்றுமைதான் முக்கியம்.

தமிழ் மானில காங்கிரஷ் சேர்ந்த ஞானதேசிகன்

“தேர்தலில் போட்டியிட வைகோ வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். சாதி மோதலை ஏற்படுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக வைகோ கூறியிருந்தார். வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தப்படும்”.

திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்

“கோவில்பட்டி திமுக வேட்பாளர் சாதி ரீதியாக பெரும்பான்மையானவர் அல்ல. முதல்வராகும் வாய்ப்பு கிடைக்காததால் வைகோ விலகியிருக்கலாம்”.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை

மக்கள் நலக்கூட்டணியின் குழப்பத்தின் உச்சக்கட்டம் வைகோ முடிவு என்றும், தேர்தல் விளையாட்டாக போய் விட்டதா என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா,

தேர்தல் தோல்வி பயம் இப்போதே வைகோவுக்கு வந்துவிட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார்

வைகோ தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபண்ணா

அரசியலில் குழப்பமான முடிவை எடுக்கக் கூடியவர் வைகோ.

பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் பாலு ,

“ராணுவ ரகசியத்தை வெளிப்படுத்தியது போல் வைகோ முடிவை அறிவித்துள்ளார். வைகோவை போல் விஜயகாந்தும் தனது முடிவை அறிவிப்பார்” .

மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார்

அதிமுகவுக்கு மாற்று என வைகோ கூறி வந்தது பொய் என நிரூபணமாகிவிட்டது என்றும், ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வைகோ திட்டமிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com