வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டமும் கையெழுத்து போராட்டமும்

1148729488Untitled-1மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து போராட்டம் என்பவற்றில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சி கலாசாலை மண்டபத்தில் இகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, கையெழுத்து போராட்டம் ஆரம்பமானது.

கலந்துரையாடலில் அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தம்மிக முனசிங்க அமைப்பாளர் தென்னே ஞானானந்த தேரோ மாட்ட தலைவர் ரி.கிஸாந்த உட்பட முக்கியஸ்தர்கள் பங்கு கொன்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012 ஏப்ரல் மாதம் முதல் பட்டதாரிகளாக வெளியேறிய 1500 பேர் வேலை வாய்ப்பின்றி உள்ளதாக சங்க தலைவர் கிஸாந்த் தெரிவித்தார்.

கையெழுத்து போராட்டத்தில் பெறப்பட்ட கையொப்பங்கள் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

பெரும் எண்ணிக்கையிலான வேலையற்ற பட்டதாரிகள் இதில் இணைந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com