வேலணை வடக்கு இலந்தவனம் #ஸ்ரீசித்திவிநாயகர்ஆலயத்தின் பஞ்சதள இராஜகோபுர மகாகும்பாபிசேகபெருவிழா

#வேலணை வடக்கு இலந்தவனம் #ஸ்ரீசித்திவிநாயகர்ஆலயத்தின் பஞ்சதள இராஜகோபுர #மகாகும்பாபிசேகபெருவிழா 08.09.2016 இடம்பெற்றதை தொடர்ந்து 24 நாட்கள் நடைபெற்ற மண்டலாபிசேகத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் கடந்த 01.10.2016 சனிக்கிழமை இடம்பெற்றது.

மேற்படி  நிகழ்வில் கும்பாபிசேக சிறப்பு மலர் வெளியீடு ஒய்வு பெற்ற வேலனை மத்திய கல்லூரி அதிபர் கு. கணேசலிங்கம் தலைமயில் இடம்பெற்றது. சிவசாமி தயாபரனின் எண்ணத்தில் வெள்ளவத்தை  விகடன் அச்சகத்தாரின் கைவண்ணத்திலும்  உருவான கும்பாபிசேக  சிறப்பு மலரினை  தீவக வலய கல்விப்பனிமனையின் பிரதி பணிப்பாளர்- திட்டமிடல் திரு .பொன்.அருணகிரிநாதன் வெளியீட்டு உரையை நிகழ்த்தி வெளியீடு செய்து வைக்க தொடர்ந்து  சிறப்பு பிரதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

முதற் பிரதியை ஆலயத்தின் அறங்காவலர்  பா.மதியழகன்  அவர்களிடமிருந்து  எஸ்.பி .சாமி (தினக்குரல் அதிபர்- வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் அறங்காவலர் ) பெற்றுகொள்ள

தொடர்ந்து  அயலில் உள்ள ஆலயங்களின் அறங்காவலர்கள் பெற்றுகொண்டனர் .

மேற்படி நிகழ்வின்  நன்றியுரையினை  மலராசிரியர் சிவசாமி தயாபரன் அவர்கள் நிகழ்த்தினார்.

dsc08307 dsc08318 dsc08319 dsc08321 dsc08323 dsc08326 dsc08342

படங்கள் : கஜன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com