வேலணையில் மூன்று கடைகளில் திருடர் கைவரிசை

வேலணை பகுதியில் உள்ள மூன்று கடைகளில் அடுத்தடுத்து திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர். இச் சம்பவம் நேற்று முன்தினம் (13) இடம்பெற்றுள்ளது. கடையின் உரிமையாளர்கள் நேற்று (14) காலை கடையினை திறக்க வந்த போது கடைகள் மூன்றும் உடைக்கப்பட்டிருந்ததுடன், பொருட்கள் அணைத்தும் சிதறுண்டு காணப்பட்டுள்ளன. முதலாவது கடை உடைக்கப்பட்டிருந்ததுடன், அதில் எந்தவித பொருட்களும் திருட்டுபோகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாவது கடைக்குள் புகுந்த திருடர்கள் 40ஆயிரத்து 840 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களான பிஸ்கட், பால்மாபெட்டிகள், சிகரெட் பெட்டிகள் மற்றும் சத்துமாபேணி என்பவற்றை திருடியுள்ளனர். மூன்றாவது கடைக்குள் புகுந்த திருடர்கள் 39ஆயிரத்து 569ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்களை எடுத்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்த குற்றத்தடுப்பு பொலிஸார் வங்களாவடி வேலணை பகுதியினை சேர்ந்த நபரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com