வேறு மாவட்ட மாணவர்கள் நுவரேலியா வந்து பரீட்சை எழுதிச் செல்ல முடியாது – அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன்

DSC02656 DSC026722017ஆம் ஆண்டுக்கு நுவரெலியா மாவட்டத்தில் உயர் தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள வெளிமாவட்ட மாணவர்கள் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்கப்படமார்கள். இவ்விடயம் தொடர்பில் அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்பட்டது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 08.08.2016 அன்று கினிகத்தேனை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது கல்வி நடவடிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி வேளையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.பியதாஸ, எம்.திலகராஜ் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், சோ.ஸ்ரீதரன், எஸ்.பிலிப்குமார், எம்.ராம், பி.சக்திவேல் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இடம்பெற்ற கல்வி தொடர்பான நடவடிக்கையில் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

வெளிமாவட்ட மாணவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை காலப்பகுதியில் இறுதி நேரத்தில் பரீட்சை எழுதுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு மாணவர்கள் சிலர் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இம்முறைபாட்டுக்கிணங்க அனுமதியை வழங்கிய பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வெளிமாவட்ட மாணவர்கள் நுவரெலியாவில் பரீட்சை எழுதினாலும், மாவட்டத்திற்கு நிர்ணயக்கப்பட்ட செட் புள்ளிகளே அவர்களுக்கு வழங்கப்படும். இருந்தும் பாரியளவில் பணம் செலவழித்து கொண்டு உல்லாச விடுதிகளில் தங்கியிருந்து பரீட்சை நடவடிக்கை கவனிக்கப்படுவதாக புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தாம் கல்வி கற்பதற்காக இணைந்துள்ள பாடசாலையில் கழிவறையை கூட இங்குள்ள மாணவர்கள் கேட்டு தெரியும் சம்மந்தமில்லாத வெளிமாவட்ட பாடசாலை மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை மாகாண மற்றும் மாவட்ட கல்வி காரியாலய உயர் அதிகாரிகள் கல்வி இராஜாங்க அமைச்சின் கவனத்திற்கு விரைவில் கொண்டு வரும் பட்சத்தில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

அத்தோடு 2017ம் ஆண்டு முதல் க.பொ.த உயர் தர மற்றும் சாதாரண தர வெளிமாவட்ட மாணவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனுமதிகள் மறுக்கப்படும். அதேவேளை இந்த நிலை தொடரும் என்றால் எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்ட மாணவர்கள் கல்வி பெறுபேற்றில் வீழ்ச்சி அடைவதுடன், உயர் பதவிகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ராம் குறிக்கீட்டு கருத்து தெரிவித்தார்.

 

எனவே இவ்விடயம் தொடர்பில் கல்வி காரியாலய அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சு மட்டத்தில் உயர் அதிகாரிகளுடன் கலந்தாலேசித்து தீர்கமான முடிவுகளை எடுக்கப்போவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் சபை நடவடிக்கையின் போது தெரிவித்தமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com