வெள்ளவத்தைக்கு ஆபத்து ! 1800 கட்டடங்கள் சட்டவிரோதமானவையாம்

கொழும்பில் சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 10,000 வீடுகளையும் அலுவலகங்களையும் தகர்க்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. வெள்ளவத்தையில் ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்தமையினால் ஒருவர் உயிரிழந்ததுடன் 23 பேர் காயமடைந்திருந்தனர். இதனயடுத்து இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மதிப்பீடுகளுக்கு அமைய குறைந்த பட்சம் சட்டவிரோதமான 10000 வீடுகள், கட்டடங்கள் மற்றும் அலுவலகங்கள் கொழும்பில் உள்ளன. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பகுதிகளுக்கு இடையில் 1800 இற்கும் அதிகமான கட்டடங்கள் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com