வெளி மாவட்ட மாணவர்கள் நுவரேலியாவில் கல்விகற்க அனுமதியில்லை

நுவரெலியா மாவட்டத்தில் வெளிமாவட்ட மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஏனென்றால் இது நுவரெலியா மாவட்ட மாணவர்களுக்கு மட்டும் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவமும், தொழில்நுட்ப ஆய்வு கூடம் திறப்பு விழாவும் 14.02.2017 அன்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் .இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் பிரச்சினை காணப்பட்டது. நுவரெலியா மாவட்டத்தில் வெளிமாவட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள் என்று. ஆனால் வெளிமாவட்ட மாணவர்களுக்கு இங்கு கல்வி கற்பதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

அரசியல் காலங்களில் அரசியல்வாதிகள் பலர் 3 மாடி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர். அப்போது பெற்றோர்களும் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்களால் 80 சதவீதம் கட்டிடங்களில் 1 மாடி கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையே காணப்படுகின்றது.

எனவே நாம் ஒருபோதும் அவ்வாறானவர்கள் அல்ல. நாங்கள் தொடங்கும் எந்தவொரு வேலையும் முழுமையாக பூர்த்தி செய்வோம். அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் செய்வதால் எவ்வித பயனும் இல்லை.

கடந்த காலங்களில் மத்திய மாகாணத்தில் இருந்த வலயங்களில் அதிகமான வலயங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டன. ஆனால் இன்று எமது அர்ப்பணிப்பின் மூலம் பாரியளவில் முன்னேற்றமடைந்துள்ளோம்.

இந்த முன்னேற்றம் நாளடைவில் முதலாவதாக வர வேண்டும் என்பதே எங்களது எதிர்ப்பார்ப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com