வெளிநாட்டு நீதிபதிகளை ‘இறக்குமதி’ செய்யப்போவதில்லை: மைத்திரி

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாடுகளிலிருந்து நிபுணர்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

‘உள்நாட்டு பொறிமுறை மூலமாகத் தான் இந்த நடவடிக்கையை செய்ய வேண்டும் என்று மிகவும் தெளிவாக நான் கூறியிருக்கிறேன். அவ்வாறே எமது அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவும் அது அமையவேண்டும். அதேபோலஇ வெளிநாடுகளிலிருந்து நீதிபதிகளைக் கொண்டுவரவும் எதிர்பார்க்கவில்லை.அதற்கு நான் இணங்கவும் மாட்டேன்’ என்றார் மைத்திரிபால சிறிசேன.

இலங்கையின் நீதித்துறையின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் உள்ளூர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு வேறு நாடுகளிலிருந்து யாரையும் ‘இறக்குமதி’ செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில் அரசியலமைப்புஇ மனித உரிமைகள்இ சட்டங்கள் என்று பல்வேறு துறைகளில் நிபுணர்களாக உள்ள இலங்கையர்களை இலங்கையின் உள்ளக விசாரணைக்காக வரவழைக்க முடியும் என்று கூறிய ஜனாதிபதிஇ சர்வதேச தலையீட்டுக்கு ஒருபோதும் தான் இணங்கப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.

‘விசாரணையின் கால அளவு தெரியாது’

‘இந்த வேலைக்கு சர்வதேச தலையீடு எமக்குத் தேவைப்படாது.எங்களின் பிரச்சனையை எங்களால் தீர்த்துக்கொள்ளமுடியும். எல்லாத் துறைகளிலும் வல்லுநர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். பௌதீக வளங்கள்இ தொழில்நுட்பங்கள் போன்ற வழிகளில் எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தான் சர்வதேசத்தின் உதவிதேவைஇ தவிர அரசியலுக்கோஇ அரச நிர்வாகத்துக்கோ எங்களுக்கு சர்வதேச உதவி தேவை இல்லை’ என்றும் கூறினார் சிறிசேன.

ஐநாவின் முன்னெடுப்பில் உலகின் வேறுநாடுகளில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு நீண்டகாலம் தேவைப்பட்டது போலஇ இலங்கையின் உள்ளக விசாரணை குறித்த கால அளவுகளை தங்களால் மதிப்பிட்டுக் கூறமுடியாது என்றும் அவர்  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds