வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் மிகவும் பலத்துடன்தான் உள்ளனர் – ஜனாதிபதி

கொழும்பு: (பதிவு செய்த நாள் – ஐப்பசி 04, 2015, 10.10. 4மு.ப)  விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டதாக சொல்வதில் உண்மை இல்லை. அவர்கள் வெளிநாடுகளில் இன்னமும் மிகவும் பலத்துடன்தான் உள்ளனர் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்து உள்ளார்.

ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு இலங்கை திரும்பிய அவர்,  கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தனது ஜெனீவா பயண அனுபவம் குறித்து அவர் கூறும்போது, ”கடந்த முறை ராஜபக்ஷ ஐ.நா. கூட்டத்திற்கு சென்றிருந்தார். ஜோதிடர்களின் பேச்சை கேட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்தியதால் அவர் தலைவிதி மாறிப்போனது.

இல்லை என்றால் இப்போதும் அவர்தான் இலங்கையின் ஜனாதிபதியாக இருந்திருப்பார். இந்த தடவையும் அவர்தான் ஐ.நா. சபை கூட்டத்துக்கு சென்று இருப்பார். ஆனால், ஜோதிடர்களை ராஜபக்ஷ கண்மூடித்தனமாக நம்பிவிட்டார். ஜோதிடர்கள் அவரை மூலையில் உட்கார வைத்துவிட்டனர்.

விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து, ஒழித்து விட்டதாக ராஜபக்ஷ கூறிக்கொள்கிறார். அதில் கொஞ்சமும் உண்மை இல்லை. இலங்கையில் வேண்டுமானால் விடுதலைப் புலிகள் இல்லாமல் இருக்கலாம். வெளிநாடுகளில் இன்னமும் விடுதலைப்புலிகள் மிகவும் பலத்துடன்தான் உள்ளனர்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com